
திருச்சி அருகே சாலை விபத்து ஒருவர் பலி
துறையூர் அருகே உள்ள இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் ஒருவர் காயமடைந்தார். செங்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சூர்யா (17 ),சுதாகர் (20) ஆகிய இருவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் செங்காட்டுப்பட்டி பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிரே வந்த லாரி, இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் சுதாகர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார் .
சூர்யா, துறையூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
