
திருச்சி மாநகர காவல் துறை எச்சரிக்கை..
மதுரை பெத்தானியாபுரம் சின்னசாமி பிள்ளை தெரு பகுதியில் வி. எல். சி. அக்ரோ டெக் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என கவர்ச்சிகர மான திட்டம் அறிவிக்கப்பட்டது. இதனை நம்பி பொதுமக் கள் பலர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

பின்னர் முதிர்வு காலம் முடிந்த நிலையில் எந்த பணத்தையும் நிறுவனம் திருப்பி தரவில்லை. இது குறித்து புகாரின் பேரில் மதுரை பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்மாறன். நிறைமாறன், வேல்முருகன் ஆகியோரை கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த நிறுவனத்தில் திருச்சி மற்றும் சுற்றுப் புற பகுதிகளில் பணம் முதலீடு செய்து ஏமாந்த பொது மக்கள் யாரேனும் இருப்பின், சம்பந்தப்பட்ட அசல் ஆவணங்களுடன் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு, சங்கர பாண்டியன் நகர், தபால்தந்தி நகர் விரிவாக்கம், பார்க்
டவுன் பஸ் நிறுத்தம் எதிர்புறம், மதுரை என்ற முகவரியில் நேரில் ஆஜராகி புகார் மனு அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தகவல்க ளுக்கு 0452-2562626 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
