
பாரதியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!
தொட்டியம் ஸ்ரீ ராகவேந்திரா கலாலயம் சார்பில் மகாகவி பாரதியாரின் 141 வது பிறந்தநாள் விழா நடந்தது.
உடையாகுளம் புதூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகம் தலைமை வகித்தார்.

ஸ்ரீ ராகவேந்திரா காலாலயம் ஆசிரியர் ராமச்சந்திரன் வரவேற்றார்.
மகாகவி பாரதியாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் பிரேம்குமார், கணேசன், தமிழ் பேரவை கௌரவத் தலைவர் நீலகண்டன், முன்னாள் தமிழ் பேரவை பொருளாளர் செல்வபதி, முன்னாள் தமிழ் பேரவை தலைவர் சண்முகசுந்தரம், தமிழ் பேரவை மாணவர் தலைவர் பாவனா, மாணவி சிவதர்ஷினி ஆகியோர் பாரதியார் பாடல்கள் குறித்து பேசினர்.

குழந்தை புகழினி பாரதியார் வேடமணிந்து பாரதியார் கவிதைகள் பாடினார்.
ஆண்டுதோறும் பாரதியாரின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது எனவும் மாணவ மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. தமிழ் பேரவை செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.
