
ஸ்ரீரங்கம் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி!

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் மாதம் ஒரு முறை உண்டியல் காணிக்கை எண்ணப்படும். அந்த வகையில் இன்று காலை ஶ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை கணக்கிடும் பணி நடைபெற்றது.
மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் உதவி ஆணையர் ஹரிஹர சுப்பிரமணியன், கோயில் மேலாளர் தமிழ்செல்வி, ஆய்வாளர் சு. பாஸ்கர் ஆகியோர் மேற்பார்வையில் திருக்கோயில் பணியாளர்கள், தன்னார்வ தொண்டர்கள். பக்தர்களின் காணிக்கைகளை கணக்கிட்டனர்.
