
திருச்சியில் லஞ்ச இன்ஸ்… சஸ்பென்ட்
திருச்சி மாவட்டம் மேலவாளாடியை சேர்ந்தவர் யுவராஜ். இவர் அதே பகுதியை சேர்ந்த ஜெகதீசன் என்பவர் மீது லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

புகாரின் பேரில் ஜெகதீசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து இன்ஸ்பெக்டர் மாலதி நடவடிக்கை மேற்கொண்டார். இதன் தொடர் நடவடிக்கையாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டி இருந்தது. குற்ற பத்திரிகையை தாக்கல் செய்வதற்காக ரூபாய் 5000 லஞ்சமாக தருமாறு யுவராஜிடம் இன்ஸ்பெக்டர் மாலதி கேட்டார்.
இன்ஸ்பெக்டர் மாலதி ரூபாய் 5000 லஞ்சம் வாங்கும் போது லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கையும் களவுமாக பிடித்து அவரை கைது செய்தனர். இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அளித்த அறிக்கையின் பேரில் இன்ஸ்பெக்டர் மாலதியை சஸ்பெண்ட் செய்து எஸ் பி சுஜித் குமார் உத்தரவிட்டார்.
