
திருச்சிக்கு மீண்டும் முதல்வர் விசிட்!

திருச்சியில் நடைபெற உள்ள அரசு நிகழ்ச்சிகளில் தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். இதையடுத்து நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேரு, நிகழ்ச்சி நடத்துவதற்கான இடம் தேர்வுக்காக திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தை ஆய்வு மேற்கொண்டார்.
கடந்த மாதம் திருச்சி காட்டூரில் நடந்த அரசு விழாவில் முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டார் . தற்போது மீண்டும் திருச்சி வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
