
தூய்மை பணியாளர்கள் போராட்டம்!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மணப்பாறை நகராட்சி சேர்ந்த தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மணப்பாறை நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களின் பதவி உயர்வு சீனியாரிட்டி அடிப்படையில் வழங்க வேண்டும். ஒப்பந்த பணியாளர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு அளிக்காமல் உள்ளதை உடனடியாக வழங்கிட வேண்டும்.

708 ரூபாய் தின கூலியாக வழங்க வேண்டும். கடந்த கால நடைமுறை படியும் நகராட்சி விதிகளின்படியும் உள்ளூர் பணியாளர்களுக்கு விகிதாச்சார ஒதுக்கீட்டின்படி பதவி உயர்வு அளிக்காத நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
சங்க நிர்வாகிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வழிவகை செய்வதாக கூறியதை எடுத்து தூய்மை பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சென்றனர்.
