
ஓட்டுனர் பயிற்சியாளர் மாயம்!

முசிறி வட்டம் மேல கோட்டூரை சேர்ந்தவர் அசோக்குமார் (45). ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 12ஆம் தேதி திருச்சி சென்று வருகிறேன் என்று சென்றவர் வீடு திரும்பவில்லை.
இது குறித்த அவரது மனைவி லோகாம்பாள் புகாரின் பேரில் முசிறி காவல் உதவி ஆய்வாளர் கருணாநிதி வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகிறார்.
