
செல்போன் கடைகளில் திருட்டு கும்பல் கை வரிசை…
திருச்சி , வரகனேரி பஜாரில், சிராஜுதீன் என்பவருக்கு சொந்தமான செல்போன்கடை உள்ளது. இந்த கடையில், நள்ளிரவு கொள்ளையர்கள் ஷட்டர் பூட்டை உடைத்து திருட முயன்றனர். அப்போது எழுந்த சத்தத்தால் பொதுமக்கள் திரண்டு வந்தனர்.

இதையடுத்து கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதனால் பல லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் தப்பியது. இது குறித்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கிலியாண்டபுரம் மெயின் ரோடு திருச்சி சங்கிலியாண்டபுரம் மெயின் ரோடு அரச மரத்தடியில் உள்ள நூர் என்பவரது செல்போன் கடையில் பூட்டை உடைத்து 4000 ரூபாய் பணத்தை திருடி சென்று விட்டனர். அதேபோல் அருகருகே உள்ள இரண்டு செல்போன் கடைகளை உடைத்து கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர். இவற்றின் மதிப்பு தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
