
சிறுமி கர்ப்பம் வாலிபருக்கு போக்சோ
மணப்பாறையை அடுத்த கோவில்பட்டி அடுத்த லஞ்சமேடு பகுதியை சேர்ந்தவர் அழகர்ராஜா மகன் நிஷாந்தன் (24). அதே பகுதியை சேர்ந்த சலவை தொழிலாளி ஒருவரின் 15 வயது மகளை காதலிப்பதாக கூறி பழகி உள்ளார்.

அதில் அந்த சிறுமி கர்ப்பமாகி, கடந்த சில நாட்களுக்கு முன் குழந்தையும் பெற்றார். இந்நிலையில் சிறுமிக்கு குழந்தை பிறந்ததற்கு , தான் காரணம் இல்லை என்று நிஷாந்தன் கூறி, சிறுமியையும், அவரது குடும்பத்தினரையும் கொன்று விடுவதாக மிரட்டினாராம்.
இது குறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில், நிஷாந்தன் மற்றும் அவரது தந்தை அழகர்ராஜா, தாய் ராணி ஆகியோர் மீது மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
