
வீடு வீடாக அலசல் கஞ்சா “கருப்புகள்”கைது!

திருச்சி எஸ்பி சுஜித் குமார் உத்தரவின்படி ஜீயபுரம் டிஎஸ்பி பாரதிதாசன் தலைமையில் ராம்ஜி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணி உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் ராம்ஜிநகர் முழுவதும் வீடு வீடாக சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் ராம்ஜி நகரை சேர்ந்த சந்தோஷ்(38), சங்கர்(52), ஜெயக்குமார்(46) ஆகியோரிடமிருந்து மூன்று கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டு,மூவரும் கைது செய்யப்பட்டனர்.
