
கல்லூரியில் நுழைந்த திராவிட மாடல்!
கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு சீனியர் மாணவர்கள் இனிப்பு கொடுத்து வரவேற்பது வழக்கம். ஆனால் திருச்சி பெரியார் கல்லூரி மாணவர்கள் ஒரு வித்தியாசமான நிகழ்ச்சிக்காக சக மாணவர்களுக்கு இனிப்பு கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.

அப்படி என்ன செய்தனர் என்று கேட்கிறீர்களா… அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றதை கொண்டாடும் வகையில் பெரியார் கல்லூரி மாணவர்கள் சிலர் கல்லூரி வளாகத்தில் சக மாணவ மாணவிகளுக்கு இனிப்பு கொடுத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
பொதுவாக கல்லூரிகளில் அரசியல் கட்சிகளின் தாக்கம் அவ்வளவாக இருக்காது. மாணவர் தலைவர் தேர்தல் நடக்கும் போது மட்டும் சில மாணவர்கள் அரசியல் பலத்தோடு தேர்தல் களத்தில் இறங்குவார்கள்.
மற்ற நேரங்களில் பெரும்பாலும் அரசியல் சம்பந்தமாகவோ கட்சிகள் சம்பந்தமாகவோ கல்லூரிகளில் எவ்வித தாக்கமும் இருக்காது. ஆனால் புதிய கலாச்சாரமாக பெரியார் கல்லூரி மாணவர்கள், உதயநிதி ஸ்டாலின் பொறுப்பு ஏற்றதை இனிப்பு கொடுத்து கொண்டாடியுள்ளது மற்ற கல்லூரி மாணவர்களிடையே பேசும் பொருளாக மாறி உள்ளது.
