
விபத்தால் சிக்கிய இரும்பு திருடன்
திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே பாலையூரை சேர்ந்தவர் செந்தில் . ரைஸ் மில் அதிபர். இந்த மில்லில் உள்ள இரும்பு பொருட்களை சிலர் ஆம்னி காரில் ஏற்றிக்கொண்டு இருப்பதை கண்டு சந்தேகமடைந்த பொதுமக்கள் அவர்களை பிடிக்க முயன்றனர்.

இதைக்கண்ட மர்ம நபர்கள் ஆம்னி காரில் தப்பிச் சென்றனர். கிராம மக்கள் இருசக்கர வாகனத்தில் ஆம்னி வேனை பின் தொடர்ந்து விரட்டி சென்றனர். மின்னல் வேகத்தில் பறந்து சென்ற ஆம்னி கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
காரை ஓட்டி வந்த திருச்சி மேலசிந்தாமணி விக்னேஷ் என்பவர் காரின் ஸ்டீரிங் பகுதியில் சிக்கினார். தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் விக்னேஷை மீட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில் விக்னேசுடன் மேலும் இரண்டு பேர் சேர்ந்து கூட்டாக ஆம்னி காரில் இரும்பு பொருட்களை திருடியதும் காரில் வந்த மற்ற இரண்டு நபர்கள் பாதி வழியில் இறங்கி சென்றுவிட்டதும் தெரியவந்தது. சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பிச் சென்ற இரண்டு நபர்களை தேடி வருகின்றனர்.
