
மின்சாரம் தாக்கி 2 பேர் பலி
வாத்தலையை அடுத்த ஆம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கந்தன் மகன் முரளி (26 ). இவர் புதிதாக கட்டும் வீட்டிற்கு தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்த பொழுது புதிய மின் இணைப்பில் கசிவு ஏற்பட்டதால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

வாத்தலை போலீசார் விசாரிக்கின்றனர். சோமரசம்பேட்டை மருதாண்டக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் மகன் கார்த்திக் (17). திருச்சி தேசியக் கல்லூரியில் பி.பி.ஏ முதலாமாண்டு படித்து வந்தார்.
வீட்டில் உள்ள மின் மோட்டாரை இயக்கும்போது மின்சாரம் தாக்கியதில் பலியானார் . இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
