
தமிழ்நாடு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

திருச்சி மன்னார்புரம் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐக்கிய சங்க மாநில தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். தமிழ்நாடு மின்வாரியத் தலைவர் எத்தகைய மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அனைத்து தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசியே முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் தன்னிச்சையாக எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்றும் வலியுறுத்தி கண்டன கோஷங்கள் முழங்கப்பட்டது.
