NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

திருச்சி தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு…

0
1

திருச்சி தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரியில்
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு…

 

திருச்சி சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் இயங்கும் சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மருத்துவ படிப்பு முதலாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.

பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன், தலைமை வகித்து பேசியதாவது,

4

மாணவர்கள் நல்ல முறையில் கல்வி பயின்று தங்கள் நேரத்தை சரியான முறையில் பயன்படுத்தி நேர்மையுடனும் பெருமையுடனும் சமூகத்திற்கு சேவை செய்ய கடினமாக உழைக்க வேண்டும். மருத்துவ படிப்பை தேர்ந்தெடுத்ததற்காக மாணவர்களுக்கு பாராட்டுக்கள்.

பல்கலைக்கழக இணை வேந்தர் அனந்தலட்சுமி கதிரவன், துணை வேந்தர் டாக்டர் ரஞ்சன், தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத்தின் நிர்வாக இயக்குனர் நீலவாணி கதிரவன் ஆகியோர் மாணவர்களை வாழ்த்தி பேசுகையில் , மாணவர்கள் தங்கள் தகவல் தொடர்பு திறன், சரியான அணுகுமுறை, அர்ப்பணிப்பு, இரக்கம் மற்றும் மக்கள் நலனுக்காக பணியாற்றுதல் போன்ற பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

3

மாணவர் நலன் மற்றும் உடற்கூறியியல் துறை தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன் புதிதாக பதிவு செய்யப்பட்ட மருத்துவ மாணவர்களை உறுதிமொழி ஏற்கச் செய்தார்.

முன்னதாக சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை புல முதல்வர் டாக்டர். துளசி வரவேற்றார். தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத்தின் செயலாளர் நீலராஜ், பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர். ரவிச்சந்திரன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சந்தா 1
Leave A Reply

Your email address will not be published.