NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

திருச்சியில் திமுக சார்பில் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம்!

0
1

திருச்சியில் திமுக சார்பில் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம்!

பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு  திருச்சி மாநகராட்சி 35, 36அ வட்ட திமுக மற்றும் காட்டூர் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து அரியமங்கலம் அம்பிகாபுரத்தில் உள்ள பிருந்தாவன் பள்ளியில் கலைஞரின் வரும் முன் காப்போம் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

4

இந்நிகழ்ச்சியில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் கே.கே.கே.கார்த்திக் வரவேற்றார். திருச்சி கிழக்கு மாநகர தி.மு.க. செயலாளரும் மாநகராட்சி மண்டலம் 3-ன் கோட்ட தலைவருமான மு.மதிவாணன் தலைமை தாங்கி மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். பகுதி. செயலாளர் ஓ.நீலமேகம் முன்னிலை வகித்தார்.

இந்தமுகாமில் ஏழை,எளிய மக்களுக்கு பொது மருத்துவம், சர்க்கரை நோய் மருத்துவம், மகப்பேறு மருத்துவம், கண், காது, மூக்கு,தொண்டை மருத்துவம், தோல், பல், ஆயுர்வேத மருத்துவம், இ.சி. ஜி., ஸ்கேன், மக்களைத் தேடி மருத்துவம், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து பணி ஆகியவை மேற்கொள்ளப்பட்டது.

3

இந்த முகாமில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். முடிவில் வட்ட செயலாளர்கள் ஆர்.சுரேஷ், எம். ஆனந்த் ஆகியோர் நன்றி கூறினர்.

சந்தா 1
Leave A Reply

Your email address will not be published.