
சமயபுரம் கோயிலில் ஈ.ஓ., கை வரிசை
திருச்சி சமயபுரம் கோவிலில் நடந்த உண்டியல் கணக்கீடும் பணியின் போது 30 கிராம் எடையுள்ள தங்க நகைகளை திருடிய செயல் அலுவலர் மீது போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 15 ஆம் தேதி அன்று உண்டியல் என்னும் பணி நடைபெற்றது.
உண்டியலில் மொத்தம் 83 லட்சத்தி 79 ஆயிரத்து 394 ரூபாய் ரொக்கம் இருந்தது . 2 கிலோ மற்றும் 667 கிராம் தங்கம் இருந்தது. 3 கிலோ 101 கிராம் வெள்ளி இருந்தது. வெளிநாட்டு ரொக்கம் 104 .இருந்தது. உண்டியல் கணக்கிடும் பணிகள் நிறைவடைந்த நிலையில் உண்டியல் என்னும் பணிகளின் ஒட்டுமொத்த கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் கோயில் கண்காணிப்பாளர் அழகர்சாமி ஆய்வு செய்தார் .

அப்போது உண்டியல் என்னும் பணியில் ஈடுபட்டு இருந்த திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் திருக்கோயில் செயல் அலுவலர் வெற்றிவேல் என்பவர் ,30 கிராம் எடையுள்ள தங்க நாணயங்களை திருடி தன் பேண்ட் பாக்கெட்டில் ஒளித்து வைத்ததை கண்காணிப்பாளர் கண்டுபிடித்தார்.

தொடர்ந்து வெற்றிவேலை சோதனை செய்த இதர அதிகாரிகள் அவர் பேண்ட் பாக்கெட்டில் இருந்து 30 கிராம் எடையுள்ள தங்க நாணயங்களை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து கோயில் கண்காணிப்பாளர் அழகர்சாமியின் புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர் இதற்கிடையே சம்பந்தப்பட்ட செயல் அலுவலர் வெற்றிவேல் தலைமறைவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆத்தா…கண்ணை குத்தாதா????
