
திருச்சி விமானநிலையத்தில் இடியாப்ப மிஷினில் கடத்தல் தங்கம்
இடியாப்ப மிஷினில் மறைத்து எடுத்து வரப்பட்ட கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி விமான நிலையத்திற்கு சர்வதேச நாடுகளில் இருந்து விமானங்கள் வந்து செல்கின்றன. அவ்வாறு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் சிலர் தங்கத்தை பல்வேறு வடிவங்களில் மறைத்து எடுத்து வருகின்றனர்.


அவ்வாறு எடுத்து வரப்படும் தங்கமானது விமான நிலைய சுங்கத்துறை மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது அதே வரிசையில் பெண் பயணி ஒருவர் கொண்டு வந்த இடியாப்பம் மெஷினை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அந்த மிஷினுக்குள் உருளை வடிவ தங்கத்தை மறைத்து வைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்டது 24 காரட் தூய்மையான உருளை வடிவ தங்கக் கம்பிகள், 811. 000 கிராம் எடைக்கொண்டது. இதன் மதிப்பு 44 லட்சத்து 17 ஆயிரத்து 517 ஆகும். இதுகுறித்து அப்பெண்ணிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
