
காவல் துறையினர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம்!
தொட்டியம் ஒன்றியம் எம். புத்தூர் அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப் பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

தலைமை ஆசிரியை நவநீதம் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பாலு முன்னிலை வகித்தார். காட்டுப்புத்தூர் காவல்துறை துணை ஆய்வாளர் செந்தில்குமார், தொட்டியம் காவல்துறை துணை ஆய்வாளர் நல்லதம்பி, பயிற்சி உதவி ஆய்வாளர் கவிதா, காவலர் ரம்யா ஆகியோர் போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போதைப் பொருள்கள் பள்ளி அருகே விற்கப்பட்டால் தெரியப்படுத்தவும், பெண்கள் பாதுகாப்பு குறித்தும், பெண்களுக்கு எதிரான பாலியல் தடுப்பு குறித்தும் பேசினர்.
குழந்தை திருமணம் தடுப்பு குறித்தும் குழந்தை திருமணம் செய்தால் தெரியப்படுத்த வேண்டும். 1098 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும். அவசர உதவியாக இருந்தால் 100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினர். மாணவிகள் ரக்ஷனா, மங்கையர்கரசி ஆகியோர் தொகுத்து வழங்கினர். ஆசிரியர் அன்பழகன் நன்றி கூறினார்.
