ராகுல் காந்தியின் 100 வது நாள் பயணம்.. திருச்சியில் காங்கிரசார் கொண்டாட்டம்

ராகுல் காந்தியின் 100 வது நாள் பயணம்.. திருச்சியில் காங்கிரசார் கொண்டாட்டம்
ராகுல் காந்தி எம். பி. யின் இந்திய ஒற்றுமை பயணத்தின் நூறாவது நாள் நிறைவை முன்னிட்டு, திருச்சி காங்கிரஸ் கட்சி சார்பில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மலைவாசல் பிள்ளையார் கோவிலில் தமிழ்நாடு தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் விச்சு என்கிற லெனின் பிரசாத் தலைமையில் சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.

அங்கிருந்து ஊர்வலமாக சென்று சின்னக்கடை வீதி நான்கு ரோட்டில் காங்கிரஸ் கட்சி கொடியேற்றிய நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர் .
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் சரவணன், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் முரளி, இளைஞர் காங்கிரஸ் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ் சந்திரன், அப்துல் காதர், இளைஞர் காங்கிரஸ் காங்கிரஸ் கிழக்கு தொகுதி தலைவர் முகமது ரஃபி, 11-வது வார்டு தலைவர் வெங்கடேஷ் காந்தி, ஜங்ஷன் கோட்டத் தலைவர் பிரியங்கா பட்டேல், 16-வது வார்டு தலைவர் சம்சுதீன், மகிளா காங்கிரஸ் அஞ்சு, கலைப் பிரிவு கோட்டத் தலைவர் ராஜீவ் காந்தி, நாகமங்கலம் சீனிவாசன், சண்முகம், தமிழ்நாடு ஊடகப்பிரிவு தலைவர் அபூ, சிறுபான்மை பிரிவு பஜார் மொய்தீன், இளைஞர் காங்கிரஸ் ஜி. எம். ஜி. மகேந்திரன், மணிவேல், நிர்மல் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
