
திருச்சி மாவட்டம் முழுவதும் சல்லடை கஞ்சா வியாபாரிகள் கைது
திருச்சி மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் நடந்த அதிரடி சோதனைகளில் கஞ்சா விற்ற நபர்கள் சிக்கினர்.
லால்குடி : லால்குடி புதிய பாலம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின்படி லால்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்ற மைதீன் பாட்ஷா (49) என்பவரை கைது செய்தனர் . அவரிடம் இருந்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 1100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

பூவாளூர்: பூவாளூர் கிராமத்தில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் நேரு. இவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்படி போலீசார் சோதனை நடத்தினர்.
இதில் 13 பாக்கெட் ஹான்ஸ், புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நேரு கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
புங்கனூர் பிராட்டியூர் சாலையில் சோமரசம்பேட்டை போலீசார் சோதனை மேற்கொண்டனர். அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திருச்சி புதுகாட்டூர் பகுதியைச் சேர்ந்த சரண் என்கிற சரண்ராஜை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 1150 கிராம் எடையுள்ள 11 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மணப்பாறை- விராலிமலை சாலை பாரதியார் நகர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ( சோலைராஜ் (25) முகமது ரியாஸ் (23) ) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
