
திருச்சியில் அன்பழகன் நூற்றாண்டு விழாயொட்டி இலவச மருத்துவ முகாம்!
பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக மருத்துவ முகாம் தொடக்க விழா திருச்சி உறையூர் எஸ். எம். மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

அமைச்சர் கே. என். நேரு தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன், மேயர் அன்பழகன், கவுன்சிலர் நாகலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு பொது மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை, சிறப்பு மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள், சிகிச்சைகள், மேற்கொள்ளப்பட்டன. முகாம் ஏற்பாடுகளை திமுகவின் உறையூர் பகுதி ஒன்பதாவது வார்டு குழுவினர் செய்திருந்தனர்.
