
பாஜகவினர் கலெக்டரிடம் மனு!

திருச்சி திருவெறும்பூர் மலைக்கோவில் எறும்பீஸ்வரர் ஆலயம் அருகில் புதிதாக உணவகம் ஒன்று திறக்கப்பட உள்ளது. இந்த உணவகத்துக்கு 30.11.2022 அன்று தொல்லியல் துறை தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த தடையானையை அமல்படுத்த கோரிதிருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் பாரதிய ஜனதா கட்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் சார்பில் பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் மாரியப்பன், மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் இந்திரன் , அரசு தொடர்பு மாவட்ட செயலாளர் சதீஸ், திருவெறும்பூர் நகர் மண்டல் தலைவர் பாண்டியன், வடக்கு ஒன்றிய தலைவர் செந்தில்குமார் ஆகியோர் மனு அளித்தனர்.
