மணப்பாறையில் கிறிஸ்துமஸ் தாத்தா ஓவியம் வரைந்தால் கிறிஸ்துமஸ் தாத்தா டிரஸ் பரிசு !
ஓவியம் வரைந்தால்
கிறிஸ்துமஸ் தாத்தா டிரஸ் பரிசு
கிறிஸ்துமஸ் தாத்தா ஓவியத்தை வரைந்து கிறிஸ்துமஸ் தாத்தா உடையை பரிசாக பெற்றுச் செல்லுமாறு குழந்தைகளுக்கு மணப்பாறை சுமங்கலி டெக்ஸ்டைல்ஸ் அண்ட் ரெடிமேட் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
அடுக்கு நடை ,மிடுக்கு உடை ,அதற்கேற்ற கடை என்ற தாரக மந்திரத்தோடு மணப்பாறை நகரில் சுமங்கலி டெக்ஸ்டைல்ஸ் அண்ட் ரெடிமேட்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் , புத்தாண்டு போன்ற விழா காலங்களில் சிறப்பு தள்ளுபடி விற்பனை செய்யப்படுவது வழக்கம் .

அந்த வகையில் தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை முன்னிட்டு குழந்தைகளுக்கான ஓவிய திருவிழா போட்டிகளை சுமங்கலி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது .
இந்த போட்டிகளில் இரண்டு முதல் 9 வயது வரையான குழந்தைகள் கலந்து கொள்ளலாம்.
போட்டிகளில் கலந்து கொள்ளும் குழந்தைகள், கிறிஸ்மஸ் தாத்தா உருவப்படத்தை ஓவிய திருவிழாவில் ஓவியமாக வரைந்து நிர்வாகத்திடம் அளிக்க வேண்டும் .
இதில் தேர்வு செய்யப்படும் ஐந்து குழந்தைகளுக்கு தினமும் கிறிஸ்துமஸ் தாத்தா உடை பரிசாக வழங்கப்படும்.
இரண்டு வயது முதல் மூன்று வயது வரையான குழந்தைகளுக்கு வரும் 21 ஆம் தேதியும் ,4 முதல் 5 வயது வரையான குழந்தைகளுக்கு வரும் 22ஆம் தேதியும், ஆறு முதல் ஏழு வயது வரையான குழந்தைகளுக்கு 23 ம் தேதியும், 8 முதல் 9 வயது வரையான குழந்தைகளுக்கு 24 ஆம் தேதியும் ஓவிய திருவிழா ஓவிய போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்த போட்டிகளில் இரண்டு வயது முதல் 9 வயது வரையான குழந்தைகள் பங்கேற்று தங்களது திறமைகளை நிரூபித்து கிறிஸ்துமஸ் தாத்தா உடையை பரிசாக பெற்றுக் கொள்ளலாம் .
இது குறித்து மேலும் விவரங்கள் தேவைப்படுவோர் 04332-261101 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.