
திருச்சியின் பல்வேறு பகுதிகளில் திமுக பொதுக்கூட்டம்
திருச்சி மாநகரம் அரியமங்கலம் பகுதி திமுக சார்பில் முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் அரியமங்கலத்தில் நடந்தது.
திமுக முன்னாள் பொதுச் செயலாளர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு பொது கூட்டங்கள் நடத்தப்படும் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு .க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன் அடிப்படையில் திருச்சி மாநகர அரிய மங்கல பகுதி கழகம் சார்பில் திருச்சி மாநகராட்சி 37 வது வார்டுக்கு உட்பட்ட அரியமங்கலம் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு கிழக்கு மாநகர செயலாளரும் திருச்சி மண்டலம் 3 தலைவருமான மதிவாணன் தலைமை வைத்தார்.

திமுக அரியமங்கலம் பகுதி வட்ட செயலாளர்கள் மற்றும் பகுதி நிர்வாகிகள் ரங்கநாதன், கதிர்வேல், சுரேஷ், ஆனந்த், முருகானந்தம், சிவசக்தி கார்த்திக் ஆகியோர் முன்னிலை வைத்தனர். தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சரும் திருச்சி தெற்குமாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.
தலைமைக் கழக பேச்சாளர் கம்பம் செல்வேந்திரன், முன்னாள் எம்எல்ஏ சேகரன், பகுதி செயலாளர்கள் தர்மராஜ், விஜயகுமார், மோகன் டி பி எஸ் எஸ் ராஜுமுகமத் சிவகுமார், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர், கருணாநிதி, கங்காதரன் மற்றும் திமுக நிர்வாகிகள் தனசேகர் சாந்தகுமாரி சாலமன், கயல்விழி, ஞான தீபம், மணிமேகலை உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொழுகைக்கு மதிப்பளிப்பு
மணப்பாறை அக்ரஹாரம் பகுதியில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசினார். பேச தொடங்கிய சில நிமிடங்களில் அருகில் உள்ள பள்ளி வாசலில் இருந்து தொழுகைக்கான பாங்கு சப்தம் கேட்டது. இதை கேட்ட அடுத்த நொடியே அமைச்சர் அன்பில் பேச்சை நிறுத்து விட்டு 3 நிமிடம் அமைதியாக இருந்தார். அப்போது அந்த பகுதியே அமைதியாக இருந்த நிலையில் பாங்கு சொல்லி முடித்ததும் மீண்டும் பேச்சை தொடங்கினார்..
மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.
துறையூர்
துறையூர் பாலக்கரையில் திருச்சி வடக்கு மாவட்ட திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திருச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முசிறி சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி தியாகராஜன் தலைமை வகித்தார்.
துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் ,மாவட்ட சேர்மன் தர்மன் ராஜேந்திரன் மாவட்ட அறங்காவலர் நியமன குழு தலைவர் முரளி, துறையூர் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, வீரபத்திரன் ,சரவணன் துறையூர் ஒன்றிய சேர்மன் சரண்யா மோகன்தாஸ் ,நகர்மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன், ஆதி திராவிட நலக்குழு அமைப்பாளர் கஸ்டம்ஸ் மகாலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
