
c மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!
திருச்சி மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகத்துக்கு தேசிய சுகாதார குழுமத்தின் கீழ், காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் பிரதீப்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
1 பல் மருத்துவா்,
35 செவிலியா்கள்,
2 சுகாதார ஆய்வாளா்கள்,
1 நகா்ப்புற சுகாதார செவிலியா்,
1 ஆய்வக நுட்புநா்,
1 துப்புரவு பணியாளா்,
1 பாதுகாவலா்,
2 மருத்துவமனை பணியாளா்,
1 ஆடியோமேட்ரிஷியன், 1 பேச்சு பயிற்றுநா்,
1 ஆடியோலஜிஸ்ட்,
3 தரவு உள்ளீட்டாளா்,
1 அலுவலக உதவியாளா்,
1 பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளா்,
1 நுண்கதிா்வீச்சாளா் ஆகிய பணியிடங்களுக்கு 35 வயதுக்குட்பட்ட தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை துணை இயக்குநா், சுகாதாரப் பணிகள் அலுவலகம், ரேஸ்கோா்ஸ் சாலை, ஜமால் முகமது கல்லூரி அருகில், டி. வி. எஸ். டோல்கேட், திருச்சி – 620020 என்ற முகவரியில் அலுவலக வேலை நாட்களில் பெற்றுக் கொண்டு, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை
டிச. 26 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேரும்படி நேரிலோ அல்லது விரைவு தபாலிலோ அனுப்ப வேண்டும்.
இப்பதவிகளுக்கு ரூ. 8, 500 முதல் ரூ. 34 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். இப்பதவிகள் முற்றிலும் தற்காலிகமானவை (11 மாதம் 29 நாள்கள்). எந்த காலத்திலும் பணிநிரந்தரம் செய்யப்படமாட்டாது. மேலும் விவரங்களுக்கு 0431-2333112. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
