
குட்கா பறிமுதல் உ.பி., ஆசாமி கைது
சமயபுரம் ராகவேந்திரா நகர் டோல் பிளாசா அருகே சமயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர்.
அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த சந்தேகத்திற்கு இடமான நபரை சோதனை செய்த போது அவர்களிடம் 5 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டது இது குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மன்னச்சநல்லூரை சேர்ந்த அராபத் இனாம் சமயபுரம் ராமராஜன் என தெரியவந்தது.

அவர்களிடமிருந்து இருந்து புகையிலை பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
மற்றொரு சம்பவம்

சமயபுரம் சுங்கச்சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது வட மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் ஸ்கூட்டியில் வந்தார்.
அவரை சோதனை செய்தபோது நான்கு கிலோ குட்கா பொருட்களை அவர் கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் உத்தரப்பிரதேச மாநிலம் கோராக்பூர் மாவட்டம், கேசவப்பர் பகுதியைச் சேர்ந்த கரம் பட் என்று தெரியவந்தது.
இதனையடுத்து அவரிடமிருந்து 4 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
