
திருச்சியில் தொழிலாளி பலி தற்கொலையா கொலையா? போலீசார் விசாரணை

திருச்சி பாலக்கரை ஆட்டுக்கார தெருவை சேர்ந்தவர் தனசேகரன்( 39).
நகைக்கடை தொழிலாளி. இந்நிலையில் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு செல்வதாக கூறி தனசேகரன் வீட்டிலிருந்து புறப்பட்டார். வீடு திரும்பவில்லை.
உறவினர்கள் தேடியபோது, கோபாலகிருஷ்ணன் பிள்ளை தெருவில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது.
இது குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் விசாரிக்கின்றனர்.
