
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆலோசனைக் கூட்டம்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடந்தது.

மாவட்ட தலைவர் முகமது ராஜா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் அஷ்ரப் அலி மற்றும் இலியாஸ், மாவட்ட பொருளாளர் காஜா முன்னிலை வகித்தனர்.
இஸ்லாமிய பிரச்சார பேரவை(IPP) சார்பாக கிளைகள் தோறும் மார்க்க பிரச்சாரம் செய்வது, திருச்சி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கிளைகளுக்கு மாவட்ட நிர்வாகிகள் நேரில் சென்று ஆலோசனைகள் வழங்குவது என்பது உட்பட சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
