
கத்தியை காட்டி மிரட்டியவர் கைது!

திருச்சி பீமநகரை சேர்ந்தவர் சாம்வேல். நேற்று காலை கோரையாற்று பாலம் பகுதியில் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அப்பொழுது அங்கு வந்த சௌராஷ்ட்ரா தெருவை சேர்ந்த வசந்தகுமார் என்பவர் கத்தியை காட்டி மிரட்டி 500 ரூபாய் பணத்தை பறித்து சென்றார்.
இது குறித்து சாமுவேல் அளித்த புகாரின் பேரில் அமர்வு நீதிமன்ற போலீசார் வசந்தகுமாரை கைது செய்தனர்.
