
கணக்காளரை மிரட்டியவர் கைது!
மண்ணச்சநல்லூர் வெங்கங்குடி ஊராட்சி கணக்காளராக பணிபுரிந்து வருபவர் ஜானகி (35 ). ஊராட்சி அலுவலகத்தில் அவர் இருந்தபோது அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த சிவராஜ் என்பவர் ,ஜானகிடம் ஊராட்சி கணக்கு விவரங்களை கேட்டு தகராறு செய்தார்.

அவரை தகாத வார்த்தைகள் திட்டி உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் மிரட்டினார்.
இது குறித்து மன்னச்சநல்லூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சிவராஜ் கைது செய்யப்பட்டார்.
