NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

டூ வீலர் திருடர்கள் கைது! 10 வாகனங்கள் பறிமுதல்!

0
1

டூ வீலர் திருடர்கள் கைது 10 வாகனங்கள் பறிமுதல்!

திருச்சி

திருச்சி மற்றும் மணப்பாறையில் டூவீலர்களை குறி வைத்து திருடிய ஆசாமிகள் கைது செய்யப்பட்டனர் அவர்களிடமிருந்து பத்துக்கு மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்சி தெற்கு காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரசன்ன குமார் ( 21). இவர் தனது இருசக்கர வாகனத்தை காட்டூர் கடை தெருவில் உள்ள கடை ஒன்றின் முன் நிறுத்தி வைத்துவிட்டு பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார்.
இரு சக்கர வாகனத்தை மர்மநபர் திருட முயன்றார். இதை பார்த்த பிரசன்னா குமார், அந்த நபரை கையும் களவுமாக பிடித்தார்.

4

இது குறித்து அவர் திருவரம்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர் தெற்கு காட்டூர் கமலநேரு நகரைசேர்ந்த பிரசன்னா ( 24 )என்பது தெரியவந்தது. இதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். போலீசார் சிறையில் அடைத்தனர்.

3

மணப்பாறை

மணப்பாறை நொச்சிமேடு பகுதியில், வாகன தனிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது வந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார்.
இதை அடுத்து அவரிடம் போலீசார் விசாரித்த போது அவர் வந்த இரு சக்கர வாகனத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லை .

சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் கருப்பூர் ஆரியம்பட்டியை சேர்ந்த ராஜப்பன் மகன் வேல்முருகன்(26) என்பதும், மணப்பாறை, புத்தாநத்தம், கருமலை ஆகிய பகுதிகளில் இருசக்கர வாகனங்களைத் திருடியதும், அவர் மீது 8 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து வேல்முருகனை கைது செய்த மணப்பாறை போலீஸார், அவரிடமிருந்து 10 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்

சந்தா 1
Leave A Reply

Your email address will not be published.