NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

திருச்சியில் காளான் விவசாயிகளுக்கான சிறப்பு பயிற்சி முகாம்… பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த இளம் தொழில் முனைவோர் பங்கேற்பு!

0
1

திருச்சியில் காளான் விவசாயிகளுக்கான சிறப்பு பயிற்சி முகாம்… பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த இளம் தொழில் முனைவோர் பங்கேற்பு!

திருச்சி திருவெறும்பூரை அடுத்த அம்மாபேட்டை பொன்னகர் பகுதியில் உள்ளது காளான் வளர்ப்பு பண்ணை. இங்கு சிப்பி காளான், பால் காளான், பட்டர் காளான் ஆகியவை வளர்க்கப்படுகின்றன. தற்போது குறைந்த முதலீட்டில் எப்படி பணம் சம்பாதிப்பது அதற்காக என்ன தொழில் செய்யலாம் என்பதற்கான தேடுதல் அதிகம் ஆகிவிட்டது.

காளான் விவசாயிகளுக்கான சிறப்பு பயிற்சி முகாம்

அதேபோல் அரசும் அரசு சார்ந்த நிறுவனங்களும் பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது. இதன்படி காளான் வளர்ப்பு முறை குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது . இதில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர் காளான் பண்ணையின் உரிமையாளர் கணேஷ் சரவணன் காளான் வளர்ப்பது, விதைப்பது, பயிரிடுவது, மார்க்கெட்டிங் செய்வது, மதிப்பு கூட்டு மூலம் சந்தைப்படுத்துதல், ஆன்லைன் பிசினஸ் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் குறித்து பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு விளக்கிப் பேசினார்.

4

3

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற வேளாண்மை துறையின் வணிகப்பிரிவு துணை இயக்குனர் சரவணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பயிற்சி முகாமில் பங்கேற்ற பயிற்சியாளர்களுக்கு பல ஆலோசனைகள் மற்றும் வேளாண்மை துறை சார்பில் அளிக்கப்படும் சலுகைகள் போன்று பல்வேறு பயனுள்ள தகவல்களை எடுத்து கூறினார்.

மேலும் கடலூரில் இருந்து வருகை தந்த காளான் பண்ணை உரிமையாளர் கௌரி தான்வெற்றி பெற்ற காரணம் வெற்றி பெற்றதற்கான வழிமுறைகள் போன்ற பல்வேறு தகவல்களை எடுத்து கூறினார்.

பயிற்சி முகாமில் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ,கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர் .பயிற்சி முடிவில் காளான் பண்ணை மேலாளர் கார்த்திக் நன்றி கூறினார்.

சந்தா 1
Leave A Reply

Your email address will not be published.