
திருச்சி காவிரி பழைய பாலம் திறப்பா?? நோ சான்ஸ்…
பொதுமக்கள் பாதுகாப்பை கருதி பழைய காவேரி பாலம் திறக்கப்படாது என அமைச்சர் கே. என். நேரு தெரிவித்தார்.
ஸ்ரீரங்கம் சிந்தாமணி பகுதியில் இணைக்கும் காவிரி பாலத்தை சீரமைக்கும் பணிகள் செப்டம்பர் 10 ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதனால் அனைத்து வாகனங்களும் சென்னை பைபாஸ் சாலை வழியாக 5 கிலோமீட்டர் தொலைவு சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் இரு சக்கர வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சென்னை புறவழி சாலையில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு அதிகரித்துள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு பழைய காவேரி பாலத்தை போக்குவரத்து திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வந்தது.

பாலத்தை தூய்மைப்படுத்தும் பணிகளும் நடைபெற்றன. இந்த நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி பழைய காவேரி திறக்கப்படாது என்று அமைச்சர் கே. என். நேரு தெரிவித்துள்ளார்
