
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
திருச்சி இளந்தளிர் அறக்கட்டளை துவங்கி 25-ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு திருச்சி மொராய்ஸ் சிட்டி அரங்கத்தில் கிறிஸ்மஸ் விழா கொண்டாட்டம் நடந்தது.

திருச்சி மறை மாவட்ட ஆயர் ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார். சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு நீதிபதி செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்,
கிறிஸ்மஸ் தாத்தா வேடம் அணிந்து குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது, ஆயர்கள் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி கொண்டாடினர். இதனை தொடர்ந்து ஏழை, எளிய குழந்தைகளுக்கு கிறிஸ்மஸ் புத்தாடைகள் வழங்கப்பட்டது.
மேலும் திருச்சி கலை காவேரி சார்பில் தமிழ்நாடு, தமிழ் மொழி குறித்த மேற்கத்திய நடனம் மற்றும் ராஜஸ்தான் நடனம், நாட்டுப்புற நடனம் மூலம் கல்லூரி மாணவ, மாணவிகள் நடனமாடி அசத்தினர். திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி, ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் யூஜின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
