பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு காவல் துறையினர் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம்!

பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு காவல் துறையினர் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம்!
திருச்சி மாவட்டம் தொட்டியம் ஒன்றியம் உடையா குளம் புதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகம் தலைமை வகித்தார். ஆசிரியர் கண்ணன் வரவேற்றார்.

காட்டுப்புத்தூர் காவல் துணை ஆய்வாளர் செந்தில்குமார் காட்டுப்புத்தூர் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், காவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்தும் போதைப் பொருள்கள் பள்ளி அருகில் விற்கப்பட்டால் தெரியப்படுத்த வேண்டும்.
மேலும் பெண்கள் பாதுகாப்பு குறித்தும் பெண்களுக்கு எதிரான பாலியல் தடுப்பு குறித்தும் பேசினர். குழந்தை திருமணம் தடுப்பு குறித்தும் குழந்தை திருமணம் செய்தால் எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். 1098 மற்றும் 14417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும். அவசர உதவியாக இருந்தால் 100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆசிரியர் மனோகர் நன்றி கூறினார்.
