
திருச்சியில் விவசாயி தற்கொலை!
திருச்சி மாவட்டம் தா.பேட்டை மேலபுது மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி (72) விவசாயி. வயிற்று வலிக்கு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். வயிற்று வலி அதிகமானதால் மனமுடைந்த துரைசாமி எலி பேஸ்ட் சாப்பிட்டு மயங்கி கிடந்தார்.

துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த துரைசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குப்பதிந்து துரைசாமி உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
