
திருச்சி அருகே மீன்பிடி திருவிழா
மணப்பாறையை அடுத்த சமுத்திரம் பெரியகுளத்தில் மீன்பிடி திருவிழா நடந்தது. மக்கள் போட்டி போட்டுக் கொண்டு குளத்தில் இறங்கி மீன் பிடித்தனர்.

கெண்டை, கெளுத்தி, கட்லா, ஜிலேபி என நாட்டுவகை மீன்கள் அனைவருக்கும் சிக்கின.
சுமார் 2 முதல் 10 கிலோ வரையில் பெரிய பெரிய மீன்களாக சிக்கியதால் மீன்பிடி ஆர்வலர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். மீன்பிடி திருவிழாவில் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானார் கலந்து கொண்டனர்.
