
திருச்சியில் இலவச சித்த மருத்துவ முகாம்
அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம், தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் சார்பில் இலவச சித்த மருத்துவ முகாம் திருச்சியில் நடைபெற்றது.

திருச்சி மெயின்கார்டுகேட் தெப்பக்குளம் லூர்து அன்னை ஆலயத்தில் அன்னை தெரசா மன்றத்தில் நடைபெற்ற சித்த மருத்துவ முகாமுக்கு அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமை வகித்தார். அருட்தந்தை மரிவளன், அருட்தந்தை ஜோதி, ஜான் ராஜ்குமார் லயன் வசந்தகுமார், ரவி சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
டாக்டர்கள் விஜய் கார்த்திக், மதி குமார், கணேசன், சேலம் ராஜசேகர், பிரீத்தா, திருநாவுக்கரசு, ரேவதி, தமிழ்ச்செல்வி, கீதா, இப்ராஹிம் , வசந்த ராஜன், கல்பனா, ஆனந்த ஜோதி, சாய்ராம், பாமா ஆகியோர் கலந்துகொண்டு மருத்துவ சேவை ஆற்றினர்.
பொதுமக்களுக்கு இலவச உணவு இலவச சத்து மருந்துகள், இலவச சளி மருந்துகள், இலவச கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
