
திருச்சி அருகே அரசு பஸ் டிரைவர் தற்கொலை!
திருச்சி பழூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா (50). இவர் பெரம்பலூரில் அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநராக பணியாற்றி வந்தார். கடந்த சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் பணிக்கு செல்லமுடியாமல் மன வேதனையில் இருந்து வந்த ராஜா நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்த புகாரின் பேரில் கொள்ளிடம் செக் போஸ்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
