
ஆட்டம் காட்டினார் அடங்கினார்…

திருச்சி மாவட்டம் பிச்சாண்டார்கோவில் நடுகள்ளர் தெருவைச் சேர்ந்தவர்
அடைக்கலம். இவரது வீட்டில் 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு புகுந்து விட்டது. பாம்பை கண்டதும் குடும்பத்தில் உள்ளவர்கள் பயத்தில் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்.
பின்னர் பாம்பு பிடி வீரர் பூபேஷ்க்கு தகவல் கொடுத்தனர். தகவலறிருந்து சம்பவ இடத்திற்கு வந்த பாம்புபிடி வீரர் பூபேஷ் சுமார் அரைமணி நேர போராட்டத்திற்கு பின் 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை லாவகமாக உயிருடன் பிடித்தார். பின்னர் பாம்பை கொள்ளிடம் வனப்பகுதியில் விட்டனர்.
