NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

வாசவி கிளப் எலைட் கப்பிள் திருச்சி அமைப்பின் நன்றி அறிவிப்பு கூட்டம்!

0
1

வாசவி கிளப் எலைட் கப்பிள் திருச்சி அமைப்பின் நன்றி அறிவிப்பு கூட்டம்! 

மாவட்டம் வி 503 ஸோன் 3 மண்டலம் 2 வாசகி கிளப் கப்பில்ஸ் திருச்சி அமைப்பின் சார்பில் நன்றி அறிவிப்பு கூட்டம் உறையூர் சுபமங்களா மஹாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வாசவி 503 மாவட்டத்தின் ஆளுநர் சதீஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

கௌரவ விருந்தினர்களாக இனிய நந்தவனம் மாதம் இருமுறை இதழின் ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் கடந்த 2033ஆம் ஆண்டு நடைபெற்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளில் பங்காற்றியவர்கள் பொருளுதவி செய்தவர்கள்,சேவை சிறப்பாக நடைபெற பணியாற்றியவர்கள் ஆகியவர்களுக்கு நன்றி தெரிவித்து பரிசுகள் வழங்கப்பட்டது.

வாசகி கிளப் கப்பில்ஸ் திருச்சி

4

கடந்த 2022 ஆம் ஆண்டில் இந்து மிஷன் மருத்துவமனைக்கு 5 செயற்கை கால்கள், க்ரிஷ் காப்பகத்திற்கு 5000 மதிப்பில் மளிகை பொருட்கள் ,அரசு மதுரம் மேல்நிலைப் பள்ளிக்கு ஒரு பத்தாயிரம் மதிப்பில் டேபிள் சேர் மற்றும் சேவா சங்கம் பள்ளி, சோமரசம்பேட்டை அரசு பள்ளிக்கு கல்வி உதவித்தொகைகள், திருவானைக்காவல் தேர்ன் போது அன்னதானம், கைலாநாதர் கோவில் 25 ஆயிரம் மதிப்பில் திருக்கல்யாணம், மருத்துவ முகாம்கள், ரத்ததான முகாம், இயற்கை நல்வாழ்வு பயிற்சி முகாம், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் கடந்த ஆண்டில் இந்த அமைப்பின் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

3

இதற்கு பேருதவியாக இருந்தவராகளை கௌரவிக்கும் பொருட்டு கவர்னர் பொன்னாடை போர்த்தி பரிசுகள் வழங்கினார். டிரஷரர் சதீஷ், வாசுகி ஜோதி மாத இதழின் எடிட்டர் அமரா ஜெயக்குமார் ,ஜோன் சேர் பர்சன் ராஜசேகரன், ஸோன் சேர் பர்சன் ரமேஷ்பாபு, ரோட்டரி கிளப் ஆப் டைமண்ட் சிட்டி இன் தலைவர் நிர்மல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் பெஸ்ட் சேர் பர்சன், ரீஜன் சேர் பர்சன், ஜோன் சேர் பர்சன் உள்ளிட்ட பல்வேறு வகையான விருதுகள் வழங்கப்பட்டது. மேலும் 2023 ஆம் ஆண்டிற்கான தலைவராக திவ்யா வீரமணி செயலாளர் லட்சுமி பொருளாளர் சுதா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் புதிய நிர்வாகிகளுக்கு கவர்னர் சதீஷ்குமார் வாழ்த்து தெரிவித்தார்..

சந்தா 1
Leave A Reply

Your email address will not be published.