
திருச்சியில் கிறிஸ்துமஸ் விழா திருநாவுக்கரசர் எம்.பி பங்கேற்பு
திருச்சி சிகரம் அமைப்பு சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. சிகரம் இயக்குனர் சுரேஷ் குமார் தலைமை வகித்தார். அருட்தந்தை அந்தோணி இருதயராஜ் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், திருச்சி எம். பி. யுமான திருநாவுக்கரசர் கலந்து கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில்,
இயேசுநாதர் இந்த மண்ணில் பல அற்புதங்களை நிகழ்த்தி இருக்கிறார். மனிதர்களிடையே நற்பண்பு, அன்பு, சகிப்புத்தன்மை, மன்னிப்பு போன்றவற்றை போதித்தார்.
குறிப்பாக பிறரை நேசித்து வாழ கற்றுத் தந்தார். மக்களின் பாவங்களைப் போக்க தாமே துயரங்களை சுமந்தார். அவரது போதனைகளை உலகத்தின்
பெரும்பான்மையான மக்கள் பின்பற்றி வருகின்றனர் என்றார்.
மேலும் தேவாலயம் சார்பில் நடத்தப்படும் பள்ளிக்கு சுத்தமான குடிநீர் வழங்க ரூ. 1 லட்சம் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பு இந்திரத்தை தனது சொந்த செலவில் செய்து தருவதாக உறுதி அளித்தார்.
திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் கோவிந்தராஜன், சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் இன்ஜினியர் பேட்ரிக் ராஜ்குமார், கவுன்சிலர்கள் ரெக்ஸ், சோபியா விமலா ராணி, நிர்வாகிகள் பெனட் அந்தோணி ராஜ், கே. ஆர். ராஜலிங்கம், கள்ளிக்குடி சுந்தரம், வடக்கு மாவட்ட பொருளாளர் இளையராஜா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
