திருச்சி ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா பள்ளி ஆண்டுவிழா.. கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலம்!

திருச்சி ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா பள்ளி ஆண்டுவிழா.. கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலம்!
திருச்சி கூத்தூர் ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் 17வது ஆண்டு விழா நடைபெற்றது .

பள்ளி சேர்மன் கோபிநாதன் தலைமை வகித்தார். அறங்காவலர் லட்சுமி பிரபா கோபிநாதன், இயக்குனர் வரதராஜன், கல்வி ஆலோசகர் மலர்விழி, பள்ளி முதல்வர் தயானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா பள்ளி அறங்காவலர் சகுந்தலா விருதாச்சலம்,
சென்னை சீசில் மற்றும் எவெலிவ் நிறுவனர் ஷியாமளா ரமேஷ்பாபு, ஆகியோர், மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினர்.
தொடர்ந்து ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியின் பயிலும் மாணவ மாணவிகளின் பரதநாட்டியம், குரூப் நடனம், பாடல், நாடகம் தனித்திறமைகள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.
