வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!
இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்-2023 -ன் போது புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கோரி மற்றும் இறந்தவர்கள், நிரந்தரமாக குடி பெயர்ந்தவர்கள் பெயர் நீக்கம் கோரி இணைய தள வாயிலாக வரப்பெற்ற படிவம்-6 , படிவம்-7 சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர் மற்றும் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் விசாரணை செய்து ஒப்புதல் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மேற்கு (140), திருச்சிராப்பள்ளி கிழக்கு (141) ஆகிய பகுதிகளில் ஜவுளித்துறை ஆணையரும், திருச்சிராப்பள்ளி மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளருமான வள்ளலார், மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் ஆகியோர் இன்று (18.12.2022) நேரில் சென்று மேற்பார்வையிட்டு தல விசாரணை மேற்கொண்டார்கள்.

இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் வருவாய் கோட்டாட்சியர் தவச்செல்வம், தேர்தல் வட்டாட்சியர் திரு.முத்துசாமி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.
