
அடி,தடி….கைது
திருச்சி திருவெறும்பூர் கூத்தைப்பார் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (42). பக்கத்து வீட்டில் வசிப்பவர் செல்லதுரை இருவருக்கும் முன்விரோதம் உள்ளது.நேற்று இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இது கைகலப்பாக மாறியதில் செல்லதுரை அவருடைய மகன்கள் ராகுல், சபரீஷ், அவருடைய மனைவி மகாலட்சுமி ஆகிய நால்வரும் சேர்ந்து சதீஷ்குமாரை தாக்கினர்.

இதில் காயமடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கல்லக்குடி வெங்கடாசலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கண்ணன் மற்றும் வெற்றிச்செல்வன். இவர்களுக்குள் சொத்து தகராறு காரணமாக முன்விரோதம் உள்ளது. நேற்று இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் கைகலப்பாக மாறியது.
வெற்றிச்செல்வன் அவருடைய தரப்பைச் சேர்ந்த ஜெயராமன் இருவரும் சேர்ந்து கண்ணனை தாக்கினர்.காயமடைந்த அவர் லால்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்து கல்லக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
