
திருச்சி கோயிலில் தருமை ஆதீனம் சுவாமி தரிசனம்.
திருச்சி துவாக்குடி திருநெடுங்களதார் திருக்கோயிலில் தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் சுவாமி தரிசனம் செய்தார்.

முன்னதாக அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து செல்வ விநாயகர் சேடசகணபதி திருநெடுங்களநாதர் ருத்ர திரிசதி அர்ச்சனையுடன், வாராகி அஷ்டோத்திர அர்ச்சனை மற்றும் பரிவார தெய்வங்கள் அஷ்ட புஷ்பார்ச்சனை செய்யப்பட்டது.
திருக்கோவில் செயல் அலுவலர் கூடுதல் பொறுப்பு மேனகா முன்னிலையில் திருக்கோயில் அர்ச்சகர்கள் சோமசுந்தரம், ரவி, ரமேஷ், சிவாச்சசா ரியார்கள் ஆகியோர் பிரசாதம் வழங்கினர்.
