
திருச்சி மத்திய சிறைச்சாலையில் என் ஐ ஏ அதிகாரிகள் திடீர் ஆய்வு
திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்,துணை கண்காணிப்பாளர் செந்தில் தலைமையில் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் லேப்டாப் மற்றும் மொபைல் போன் உள்ளிட்ட சில பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன அதேபோல முகாமில் உள்ள ஒன்பது நபர்களை என்னையே அதிகாரிகள் விசாரணைக்காக தங்கள் பொறுப்பில் எடுத்துக் கொண்டனர்.
இது இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கூறுகையில்,தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 9 பேரை விசாரணைக்காக கைது செய்து அழைத்துச் செல்ல வந்துள்ளனர். அவர்கள் மீதான வழக்கு குறித்த விபரங்களை கேட்டுள்ளேன் என்றார்.
