
மின்சாரம் தாக்கியதில் பூசாரி உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் ஈச்சம்பட்டியை சேர்ந்தவர் அங்கமுத்து. கோவத்தகுடி சித்தர் கோவிலில் பூசாரியாக வேலை பார்த்தார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார். இதைத்தொடர்ந்து அங்கமுத்துவின் மகன் நந்தகுமார் (24), அந்த கோவிலின் பூசாரியாக வேலை பார்த்தார். இந்நிலையில் நேற்று காலை கோவிலுக்கு சென்ற அவர் மூலஸ்தானத்தை சுத்தம் செய்துவிட்டு, அங்குள்ள மின் மோட்டாரை இயக்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
